Monday, December 28, 2009

என்ன டுமைக்கொ வணன்சரா!

தலைப்பு புரியலையாங்க? எனக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது... மேல படிங்க, நீங்களும் இப்படிப் பேசத் தொடங்கிடுவீங்க!

தீப்பெட்டி இருக்கா? குதிரைக்கு எத்தனை காலு?! என எஸ்.வீ.சேகர் படத்தில் சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதை கேட்டுச் சிரித்திருப்போம். இப்படி சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதில் இன்னொரு வகைதான் அடுத்தவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அதன்மூலமாக அவரைப் பற்றி கிசுகிசு (நம்ம தமிழில் பொரணி)பேசுவது! மிகவும் சுவாரசியமாக வீடு, அலுவலகம் என அனைத்து மட்டத்திலும் இந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது! (கொசுறு: இந்த வழக்கம், மன்னர் காலத்திலிருந்தே இருந்து வருவதை கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது!)

இந்த கிசுகிசுவில் சற்று மேம்பட்ட முறையாக, எனது அலுவலகத் தோழி, இன்னொரு வகை பேச்சுவழக்கு முறையை செயல்படுத்தி வருகிறார். இதன் சூத்திரம், எந்த வார்த்தையையும் இரண்டாகப் பிளந்து முன்பின் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது தான்! (இந்நேரத்தில் உங்களுக்கு விவேக் காமெடி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) இதன்படியாக கவுதம் என்ற எனது பெயர் தம்கவ் என்றாகி விடும். சீனி என்ற பெயர் னிசீ என்றாகி விடும்! இதுபோலவே, "நீ வெட்டியா இருக்கியா" என்பதை "நீ டிவெட்டா?" எனக் கேட்பது மிகவும் சகஜம்! திமிர் என்ற வார்த்தை கூட மிர்த்தி என்றாகும்! "உனக்கு ரொம்ப மிர்த்திப்பா!"

இதுமாதிரி பேசுவது குறிப்பிட்ட சில நண்பர்கள் வட்டத்துக்குள் நடக்குமென்பதால் "கிசுகிசு" பேசுவதே கலகலப்பான விசயமாக இருக்கும்! முதலில் இப்படிப் பேசுவது கடினமாக தோன்றினாலும் தொடர்ந்து பேசினால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்! இப்போது உங்களுக்கு தலைப்பு புரிந்திருக்குமே! எங்கே, நீங்களும் கொஞ்சம் ப்ரீட்சித்துப் பாருங்களேன்! :)

4 comments:

  1. கித்தி கித்தி சனும்பே ! வளவுஅவ் பம்சுல லைஇல் !

    ReplyDelete
  2. லில்முத பரெம் டம்கஷ்.
    நானும் வத்திராயிருப்பு தான், நீங்க எந்த தெரு?
    நாடார் ஸ்கூல்ல படிச்சீங்களா?

    ReplyDelete
  3. //கித்தி கித்தி சனும்பே ! வளவுஅவ் பம்சுல லைஇல் !//

    ஒரு வாக்கியத்தின் அனைத்து வார்த்தைகளையும் பொலந்துகட்ட வேண்டிய அவசியம் இல்லை. முக்கிய தைவார்த்தை மட்டும் மாற்றிப் பேசினால் போதும்... அது அவ்வளவு நம்கடியில்லை!

    ReplyDelete
  4. //நானும் வத்திராயிருப்பு தான், நீங்க எந்த தெரு?
    நாடார் ஸ்கூல்ல படிச்சீங்களா?//

    நானும் நாடார் ஸ்கூல்தான்! எங்க வீடு பலகுடிவடக்குத்தெருவில் இருக்கிறது. எங்க அப்பா, அம்மா அங்கதான் இருக்காங்க. நான் சென்னைக்கு வந்து பத்து வருசம் ஆயிடுச்சு!

    ReplyDelete